குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம் : வெளியான மகிழ்ச்சி தகவல்
ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekara) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், 0-30 யூனிட் ஒன்றின் விலை எட்டு ரூபாயிலிருந்து ஆறு ரூபாயாகவும் மற்றும் 30-60 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு 20 ரூபாயிலிருந்து ஒன்பது ரூபாவாகவும் அத்தோடு 60-90 அலகுகள் 30 ரூபாவாலிருந்து 18 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு
அத்துடன் 90 ரூபாவாகவும் குறைக்கப்படும் என்றும் 180 யூனிட்கள் 50 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த முன்மொழிவுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |