மரண தண்டனை கைதிக்கு பொதுமன்னிப்பு வழங்கிய மைத்திரி: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மரண தண்டனை குற்றவாளிக்கு வழங்கிய பொதுமன்னிப்பு அரசியலமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் (Supreme Court) தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, குறித்த குற்றவாளிகளை விடுவித்து மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) வழங்கிய அதிபர் மன்னிப்பு செல்லுபடியற்றது என உச்ச நீதிமன்றம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கொலை வழக்கு தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வெளிநாட்டு யுவதி கொலை
ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள றோயல் பார்க் தொடர் மாடி வீடமைப்பு தொகுதியில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி 19 வயதான இவோன் ஜோன்சன் என்ற வெளிநாட்டு யுவதி கொலை செய்யப்பட்டிருந்தார்.
அவர் தாக்கப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்திருந்தது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஷமந்த ஜயமஹாவுக்கு மைத்திரிபால சிறிசேன வழங்கி இருந்மை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |