சிறுமி மீது கொடூர தாக்குதல்: நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
4 வயது சிறுமியை கொடூரமாக தாக்கியமைக்காக பிரதான சந்தேகநபர் உட்பட ஐவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அண்மையில் 4 வயது சிறுமியை கொடூரமாக தாக்கும் காணொளியானது சமூக ஊடகங்களில் பரவி பெரிதளவில் பேசப்பட்டது.
சிறுமியை தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசிமலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு பதவிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
இதனை தொடர்ந்து எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக தகவல் தெரிவிக்காமல் மறைத்து தவறு செய்ய ஒத்துழைப்பு வழங்கிய 2 பெண்கள் (மனைவிமார்), தகவல் அறிந்தும் காவல்துறையினருக்கு அறிவிக்காத அயல் வீட்டு பெண் மற்றும் தண்டனைக்குறியவருக்கு தங்குமிடம் வழங்கி பாதுகாப்பு வழங்கிய 1 ஆண் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை காணொளி எடுத்து வெளியிட்ட பிரதான சந்தேகநபரின் 20 வயது மகனுக்கு 3 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்க காவல்துறையினர் தீர்மானித்துள்ளது.
அண்மையில் வெளியான இந்த காணொளியின் பின்னர் பாதிக்கப்பட்டது சிறுவன் என ஊடகங்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது சிறுமியென தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |