மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான புதிய பிரேரணையை வழங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மேலும் இரண்டு வார கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) தெரிவித்துள்ளது.
புதிய பிரேரணையை கடந்த எட்டாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்திருந்தது.
புதிய பிரேரணை
இந்தநிலையில், முன்னைய பிரேரணையின் கட்டணத் திருத்த விலைச் சூத்திரத்தின் கீழ் இணக்கம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக இலங்கை மின்சார சபை மீண்டும் அதே முன்மொழிவைக் கோரியுள்ளது.
அத்தோடு, மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அண்மையில் தெரிவித்திருந்தார்.
மேலும், ஒன்றரை வருடத்தில் மின்சாரத்துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |