இலங்கையை அண்டி U.S இன் மெகா கடற்போரணி கண்காணிக்க முடியாத இரகசிய பயணம்!
இலங்கைத்தீவுக்கு அருகில் வங்காளவிரிகுடா தாண்டி இந்தியப் பெருங்கடல் ஊடாக ஓமான் வளைகுடா நோக்கி அமெரிக்காவின் மெகா கடற்போர் ஆர்மடா அணி நகர்ந்தாலும் இலங்கையர்கயருக்கு இந்த விடயங்கள் அதிகம் தெரிவதற்கு சாத்தியங்கள் இல்லை.
ஏனெனில், நீண்டநாட்களுக்கு துறைமுகங்களின் நங்கூரமிடல் தேவைப்படா வகையில் ஒரு முற்றுகை போரை நடத்தும் திறன் இந்த கடற்போரணிக்கு இருப்பதால் இதற்கு இலங்கையின் துறைமுகங்கள் கூட தேவைப்படாது என்பதால் அவர்களுக்கு இப்போது இந்திய பெரியண்ணர் வீட்டின் கடலோர காவல் கப்பல்களான வராஹாவும் அதுல்யாவும் கொழும்பு துறைமுகத்தில் நிற்கும் செய்திகள் தான் தெரிகின்றன.
இலங்கையருக்கு இந்த செய்தி தெரியாமல் விட்டாலும் தமிழர்களைபொறுத்தவரை அவர்களுக்கு சிறிதரனுக்கு எதிரான சுமந்திரனின் குடைச்சல்கள் மற்றும் கிபுல் ஓயா திட்டத்தால் தமிழருக்கு பாதகம் இல்லையே என்ற அமைச்சர் சந்திரசேகரனின் கரட் துண்டு நீட்டுதல் செய்திகளின் பின்னணி தெரியும் என்ற நிலையில் இலங்கை மற்றும் பூகோள அரசியல் நிலவரங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு.....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |