தமிழ் புலம்பெயர்ந்தோரை அணைத்துக் கொள்ளும் அநுரவின் பலாலி நடைபயணம்!
Sri Lankan Tamils
Jaffna
Anura Kumara Dissanayaka
Tamil diaspora
NPP Government
By Kanooshiya
“தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமிழ் புலம்பெயர்ந்தோர் மற்றும் தெற்கின் முதலாளிகளை மாத்திரம் அரவணைத்து ஒரு நாட்டைக் கட்டியெழுப்பப் போகிறார் என்பது மிகவும் தெளிவாகிறது.” என தென்னிலங்கையில் அரசியல் தரப்புகளில் விமர்சனங்கள் வலுத்துள்ளன.
இந்நிலையில், இதனை மேற்கோள்காட்டி, தென்னிலங்கையிலிருந்து வெளியாகும் முக்கிய வார இறுதி பத்திரிகையில் விமர்சனக் கட்டுரை ஒன்றும் வெளியாகியுள்ளது.
ராஜபக்சர்களுக்கு நேர்மாறாகச் செயல்படுவது என்பது தெற்கை ஒதுக்கி வைத்துவிட்டு வடக்கைத் தழுவுவதா? எனவும் இந்தக் கட்டுரை கேள்வியெழுப்பியுள்ளது.
அனுபவமற்ற அரசியல்
அனுபவமற்ற அரசியல் கட்சி என தற்போதைய அரசாங்கம் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற பின்னணியில், ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியடைந்த போதிலும் கூட இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தற்போதைய அரசாங்கத்தால் இயலவில்லை என கூறப்படுகிறது.

இவ்வாறான பின்னணியில் தான் தற்போதைய ஜனாதிபதி தைப்பொங்கல் நிகழ்வுகளை வடக்கில் தமிழ் மக்களுடன் கொண்டாட விரும்பி, யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த வடக்கு விஜயத்திற்கு முன்னரிலிருந்தே தென்னிலங்கை அரசியல் பரப்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆட்சி பீடமேறி ஒரு வருடங்கள் கடந்த போதிலும் கூட சித்திரை புத்தாண்டை சிங்கள மக்களுடன் கொண்டாட விரும்பாத ஜனாதிபதி தைப்பொங்கலை கொண்டாட அதிக ஆர்வம் காட்டுவதாக இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இவற்றையும் தாண்டி ஜனாதிபதியின் வடக்குப் பயணம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, இரு விடயங்கள் எதிர்கட்சியினருக்கு பேசுபொருளாக கிடைத்தன.
அதில் ஒன்று தான் ஜனாதிபதியின் பலாலி நடைப்பயிற்சி, இரண்டாவது ஜனாதிபதியின் உரை.
அதிலும் இனவாதத்தை பரப்பும் நோக்கில் சிலர் தெற்கிலிருந்து வடக்கிற்கு வருகை தருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறிய விடயம் நாடாளுமன்றத்திலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஊடகம்
இவ்வாறான அரசியல் அரங்கேற்றங்களுக்கு மத்தியில் தான் ஜனாநாயகத்தின் நான்காவது தூணாக போற்றப்படும் “ஊடகம்” இவ்வாறு ஜனாதிபதியின் வடக்கு விஜயம் தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ளது.
வடக்கின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அநுர வெற்றி பெறுவாரா? என குறித்த ஊடகம் ஜனாதிபதியிடம் பகிரமங்கமாக கேள்வியும் எழுப்பியுள்ளது.
அதன்படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வடக்கு தமிழ் மக்கள் விடயத்தில் இரட்டை வேடம் பூண்டு வருவதாகவும், அவருடைய நோக்கம் தமிழர்கள் மத்தியில் மற்றுமொரு தமிழ் தேசியத் தலைவராகவோ அல்லது தமிழ் தேசியத் தலைவருடன் ஒப்பிடக்கூடிய நிலைக்கு வர வேண்டும் என்பதே, அந்த நோக்கத்திற்காக தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் உதவியை நாடியே இவ்வாறான செயற்பாடுகளில் ஜனாதிபதி ஈடுபடுகிறார் எனவும் அன்றைய உரையில் அவர் சொன்ன ஒவ்வொரு விடயமும் நன்றாக அறிந்து, புரிந்து என குறித்த கட்டுரை சுருக்கமாக வெளிப்படுத்துகிறது.
மேலும், குறித்த கட்டுரையின் இறுதியில், “ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தெற்கு அரசியல், அதை ஒரு மதமாக நம்புகிறது, மாறாக, இந்த அரசாங்கத்தைப் படிப்பது மக்களுக்கு எளிதாகி வருகிறது.
அதை சரியாகப் படிக்க வேண்டிய நேரம் நாட்டு மக்களுக்கு வந்துவிட்டது. லால்காந்த மற்றும் அநுர தலைமையிலான அரசாங்கம் எந்த பக்கம் நோக்கி, எந்த இலக்குக்காக திரும்புகிறார்கள் என்பது தற்போது தெளிவாகிவிட்டது, மக்களே இதனை மேலும் புரிந்துகொள்ள வேண்டும்” என ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
9ம் ஆண்டு நினைவஞ்சலி