மின் கட்டண திருத்தம் தொடர்பில் PUCSL வெளியிட்ட அறிவிப்பு
2026-ஆம் ஆண்டின் கடைசி காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களை மாற்றியமைப்பதஙற்கான தேவை இல்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தீர்மானித்துள்ளது.
இதன்படி, மூன்றாவது காலாண்டில் நடைமுறையில் இருந்த அதே மின்சாரக் கட்டண முறையே இந்தக் காலாண்டிலும் தொடரும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய கட்டமைப்புச் செயல்பாட்டாளர் (NSO) சமர்ப்பித்த செலவுத் தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் மின்சார விநியோகச் செலவு 2.88 சதவீதம் அதிகரிக்கும் என்று ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.
ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை
இருப்பினும், நவம்பர் 9-ஆம் திகதி புதுப்பிக்கப்பட்ட செலவுத் தரவுகள் மற்றும் பொது ஆலோசனையின் போது பெறப்பட்ட கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை கவனத்தில் கொண்ட பிறகு, மின்சாரக் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை என்று ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

2026-ஆம் ஆண்டின் கடைசி காலாண்டிற்கான செலவுத் தரவுகளை ஒகஸ்ட் 17-ஆம் திகதிக்கு முன்பாகவே தேசிய கட்டமைப்புச் செயல்பாட்டாளர் சமர்ப்பித்திருக்க வேண்டும் என்றாலும், அந்தத் தரவுகள் ஒக்டோபர் 6-ஆம் திகதியே சமர்ப்பிக்கப்பட்டதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |