கைவேலி பகுதியில் கோர விபத்து - மூன்று இளைஞர்கள் படுகாயம்
முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் நேற்று (09-11-2026) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த இளைஞர்கள் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விசாரணை
குறித்த விபத்தில் புதுக்குடியிருப்பு ஆடை உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் இரு இளைஞர்களும், கைவேலி பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு இளைஞரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த மூவரும் மேலதிக சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்தது தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |