சம்மாந்துறையில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
death
sammanthurai
farmer
Ampara
By Thavathevan
சம்மாந்துறை வயல் பகுதியில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பள்ளாறு மயில்லோடை வயல் பிரதேசத்தில் வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இன்று மதியம் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிர் இழந்தவர் சம்மாந்துறை விளினையடியைச் சேர்ந்த 68 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை ஆவார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி