காட்டு யானை தாக்கியதில் 16 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழப்பு
Sri Lankan Tamils
Sri Lanka
Elephant
By Kiruththikan
உயிரிழப்பு
காட்டு யானை தாக்கியதில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இன்று (28) காலை உயிரிழந்துள்ளார்.
14 நாட்களுக்கு முன்னர் யானை தாக்கி உயிரிழந்த தனது சகோதரரின் ஆத்ம சாந்தி பிரார்தனைகளுக்காக பெற்றோருடன் விகாரைக்கு சென்று கொண்டிருந்தபோதே, யானை தாக்குதலுக்கு இலக்கானார்.
பின்னர், அவர் ஹசலக்க வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காட்டு யானைகளின் அட்டகாசம்
ஹசலக்க, கங்கேயாய, பஹே-எல பகுதியைச் சேர்ந்த அனுத்தரா இந்துனில் என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவர்.
காட்டு யானைகளின் அட்டகாசத்திற்கு உரிய தீர்வை அதிகாரிகள் வழங்காவிடின் மேலும் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாவதை தடுக்க முடியாது என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி