வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு: பண்ணை உரிமையாளர் கைது!
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Shadhu Shanker
வவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பண்ணைகாணியில் இருந்து யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டள்ளது.
குறித்த காணியில் நேற்றையதினம்(8) யானை ஒன்று இறந்து கிடப்பதை அவதானித்த காணியின் உரிமையாளர் புளியங்குளம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியிருந்தார்.
அதற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம் காவல்துறையினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையின் இறப்பு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்தனர்.
யானையின் சடலம் மீட்பு
உயிரிழந்த யானை24 வயது மதிக்கத்தக்கது என தெரிவிக்கப்படுவதுடன், சடலம் இன்று(9) உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் அக்காணியின் உரிமையாளர் புளியங்குளம் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டதுடன், சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி