திருகோணமலையில் மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானை உயிரிழப்பு
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka Police Investigation
Elephant
By Sathangani
திருகோணமலை சூரியபுர பகுதியில் மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கந்தளாய் சூரியபுர காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் காட்டு யானைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் அதிகளவு மின்சாரம் கடத்தப்பட்டதன் காரணமாக அதில் சிக்குண்ட குறித்த யானை உயிரிழந்துள்ளது.
மக்கள் விசனம்
குறித்த சம்பவம் இன்று (03) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகாமையில் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் உணவுண்பதற்காக யானைகள் வருகை தருவதாகவும் அதனால் தாம் பெரிதும் அச்சத்திற்கு மத்தியிலே வசித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சூரியபுர காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி