முல்லைத்தீவில் யானை உயிரிழப்பு - காணி உரிமையாளரான பெண் கைது!
police
death
arrested
mullaitivu
elephant
By Sumithiran
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஒதியமலை கிராமத்தில் யானை ஒன்று மின்சாரவேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது.
தோட்டம் ஒன்றிற்கு கட்டப்பட்ட மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்துள்ளது
இச்சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டுள்ளதுடன் ஒட்டுசுட்டான் காவல்துறையினரும் விசாரணை நடத்தினர்.
இதன்போது தோட்டக் காணியின் உரிமையாளரான 46 அகவையுடை பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன் யானை உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
மின்சார வேலியில் தும்பிக்கையினை பிடித்தபடி யானை உயிரிழந்துள்ளது
