யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம் : சந்தேகம் வெளியிட்டுள்ள மக்கள்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, சுண்டிகுளம் பகுதியில் நுழைந்த 5 யானைகள் வீடுகள் மற்றும் கரைவலைவாடிகளில் காணப்பட்ட தென்னை மரம் உட்பட பயன்தரும் மரங்களை அழித்துள்ளன.
நேற்றிரவு (19) இடம்பெற்ற குறித்த சம்பவம் அப்பகுதியில் பலத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த யானைகளை வன ஜீவராசிகள் திணைக்களம் வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்து இறக்கி விடப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வன ஜீவராசிகள் பிரதேசம்
வடமராட்சி கிழக்கில் சுண்டிகுளத்திலிருந்து வெற்றிலைக்கேணி வரை வன ஜீவராசிகள் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால் அப்பிரதேசங்களில் இதுவரை யானைகள் காணாப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த யானைகள் வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்து இறக்கிவிடப்பாட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் நம்புகின்றனர்.
இதேவேளை சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு தென்னிலங்கையிலிருந்து கொண்டு வந்து இறக்கி விடப்பட்ட யானை ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 11 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்