கொரோனாவை ஒழிக்க ஆற்றில் பானைகள் எறிந்த இலங்கையின் பிரபல வைத்தியருக்கும் கொரோனா
corona
doctor
eliyantha white
By Jaso
ஆற்றில் பானை வீசினால் கொரோனா குறையும் என கண்டுபிடித்த இலங்கையின் பிரபல ஆயுள்வே வைத்தியர் எலியந்த வைட் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உடன் இணைந்து இவர் ஆற்றில் புனிதநீர் கலந்த பானைகளை ஆற்றில் போட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அவர் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எலியந்த வைட் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனா முதலாவது அலை இலங்கையில் ஏற்பட்ட போதும் தனது பிரமாண்ட சக்தியை பயன்படுத்தி பலரை குணப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
எலியந்த வைட் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட மருத்துவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.