பேரிடரையடுத்து புத்துயிர் பெறும் மலையக தொடருந்து மார்க்கம்: குவியும் வருமானம்!
Sri Lanka Tourism
Sri Lanka
Tourism
By Kanooshiya
டித்வா பேரிடர் நிலைமையை அடுத்து மலையக தொடருந்து மார்க்கமானது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
அதன்படி, அம்பேவெலவிலிருந்து எல்ல வரை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தொடருந்தில் பயணம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி முதல் பதுளையிலிருந்து அம்பேவெலவிற்கும் அம்பேவெலவிலிருந்து பதுளைக்கும் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதிகளவு சுற்றுலாப் பயணிகள வருகைத் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
அம்பேவெல தொடருந்து நிலையத்திலிருந்து எல்ல வரை தினமும் 300-400 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணம் மேற்கொள்வதாக அம்பேவெல தொடருந்து நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அதன்படி, தொடருந்து மார்க்கம் மீள ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அம்பேவெலவிலிருந்து எல்ல வரையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளிடமிருந்து இதுவரையில் தொடருந்து திணைக்களத்திற்கு சுமார் 400,000 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
[AO6C6XT]
[PBPT6ZY]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்