சீனாவிற்கு போட்டியாக மஸ்கின் பிரம்மாண்ட படைப்பு: 2027-ஐ ஆளப்போகும் ரோபோக்கள்
டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தனது ஆப்டிமஸ் ஹியூமனாய்டு ரோபோக்கள் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் இது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், டெஸ்லாவின் மனித உருவம் கொண்ட ஆப்டிமஸ் ரோபோக்கள் வரும் 2027 ஆம் ஆண்டு முதல் பொதுமக்களின் விற்பனைக்கு வரும் என மஸ்க் தெரிவித்துள்ளார்.
கடினமான வேலை
இவை தொழிற்சாலைகளில் கனமான பொருள்களைத் தூக்குவது போன்ற கடினமான வேலைகளைச் செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, எதிர்காலத்தில் வீடுகளில் குழந்தைகளைப் பராமரிப்பது, மளிகைப் பொருட்கள் வாங்குவது மற்றும் புல் வெட்டுவது போன்ற வீட்டு வேலைகளையும் செய்யும் திறன் கொண்டதாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா கார்களில் பயன்படுத்தப்படும் அதே மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஸ்க் நம்பிக்கை
இதனால் மனிதர்களுக்கு அருகில் பாதுகாப்பாக இவை இயங்கும் என குறிப்பிடப்படுகின்றது.

தற்போது சீன நிறுவனங்கள் இந்த ரோபோ தயாரிப்பில் 80 வீதம் முன்னணியில் உள்ள நிலையில் அவர்களுக்குப் போட்டியாக டெஸ்லா களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடப்படையில், வரும் காலங்களில் மனிதர்களை விட ரோபோக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும், ஒவ்வொருவரிடமும் ஒரு ரோபோ இருக்கும் நிலையைத் தனது நிறுவனம் உருவாக்கும் என்றும் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |