வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மின்சார சபை ஊழியர் மரணம்
வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் மின்சார சபை ஊழியரான குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று (29) இரவு இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பாதைசாரிகள் கடவை பகுதியில் வீதி ஓரமாக நடந்து சென்றவர் மீது பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனம் மாேதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
முல்லைத்தீவு மின்சார சபையில் பணி புரியும் ஊழியர் ஒருவர் குருமன்காடு கலைமகள் மைதானத்திற்கு அருகில் உள்ள வீட்டிலிருந்து தனது பணி நிமித்தம் முல்லைத்தீவு செல்வதற்காக பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்ற பாேதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் வவுனியா கலைமகள் மைதானத்தருகில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய நெளபர் என்பவர் படுகாயமடைந்து வவுனியா பொதுவைத்தியசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா காவல் நிலைய போக்குவரத்துப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 14 மணி நேரம் முன்