கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
கனடாவில் (Canada) இளைஞர்கள் குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் வேலைகளைப் பெறுவதுகூட நாளுக்கு நாள் கடினமாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவில் இளைஞர்கள் வேலை இல்லா விகிதம் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை கனடா புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
புதிய வேலை
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “செப்டம்பர் மாதத்தில் இளைஞர் வேலை இல்லா விகிதம் 15 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது 2010 இற்கு பிறகு காணப்பட்ட மிக உயர்ந்த நிலையாகும், புதிய வேலை தேடுபவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது கடினமாகியுள்ளது.
வேலைவாய்ப்புகள்
நிறுவனங்கள் புதிய பணியாளர்களை நியமிக்காத சூழல் இளைஞர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நிறுவனங்கள் நிரப்ப முயற்சிக்கும் வேலைவாய்ப்புகள் 15 சதவீதம் குறைந்துள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு சந்தை மிகுந்த நெரிசலாகி வருகின்ற நிலையில், ஒவ்வொரு பதவிக்கும் பல விண்ணப்பங்கள் வருவதால் தேர்வு செய்வது கடினமாகியுள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 1 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்