சிங்கப்பூர் காவல்துறையில் இணைய இலங்கையருக்கு வாய்ப்பு : இன்றுமுதல் நேர்முகத் தேர்வு
Sri Lanka
Singapore
By Jaso
சிங்கப்பூரில் துணை காவல்துறை அதிகாரி பணியிட வெற்றிடத்திற்காக இலங்கையிலிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளது.
முதற்கட்டமாக 100 இலங்கையர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
நான்கு நாட்கள் நேர்முகதேர்வு
இதன்படி இன்று (03) முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை காலை 06.30 முதல் முற்பகல் 10 வரை கொழும்பு 05 – லலித் அத்துலத் முதலி விளையாட்டரங்கில் நேர்முக பரீட்சை நடாத்தப்படவுள்ளது.

பங்கேற்பதற்கான தகைமை
இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கான தகைமைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

உயர்தர பரீட்சையில் குறைந்தது 3 C சித்திகள், ஆங்கில மொழி தேர்ச்சி,வயது :- 21 முதல் 39 வரை,காவல்துறை அறிக்கை,மருத்துவ ரீதியில் உடல் தகுதி,உடலில் பச்சை குத்தி இருக்கக்கூடாது,உயரம் :- 164 CM,குறைந்த பட்ச உடல் எடை :- 50KG மேலதிக தகவல்களுக்கு :- 070-6788110
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |