வன்னி பெருநிலப்பரப்பில் பல களம் கண்டவர்களின் இன்றைய நிலை (காணொளி)
இந்த நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் எம் இனத்தை நோக்கி நடந்தபடியே தான் உள்ளது. அதற்கு பழகிவிட்டோமோ என்னமோ!
தொடர் அடக்குமுறைகள், ஆக்கிரமிப்புகள் என வந்த வண்ணமுள்ளன.
75 ஆண்டுகளாக எமது இனம் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையிலும், சனத்தொகையிலும், வைராக்கியத்திலும் நலிந்து கொண்டே வருகிறது.
இது எம் மீது வன்முறையை, அடக்கு முறையை பிரயோகிப்பவர்களுக்கு வசதியாக போய்விடுகிறது.
பலர் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். பலர் இந்த யுத்தத்தின் கோரப்படியில் இறந்து போய்விட்டனர். மீது இருப்பவர்களோ வறுமைப்பட்டு கசப்பான வடுக்களைச் சுமந்து வாழ்ந்து வருகின்றனர்.
யாரை நம்புவது? யாரிடம் உதவி கேட்பது? எனத் தெரியாமல் ஏதோ முடிந்த அளவு வாழலாம். எமது பிள்ளைகளின் வாழ்க்கையை முன்னேற்றி விடலாம் என நித்தம் பல சிரமங்களுக்கு உள்ளாகி வாழ்ந்து வருகிறார்கள்.
அதில் வன்னி பெருநில பரப்பில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், முன்னாள் போராளிகள் - எல்லாவற்றையும் இழந்து நினைவுகளையும் உடலில் காயங்களையும் சுமந்து வாழ்ந்து வருகின்றனர்.
இன்றும் கூட, என் இனமே என் சனமே குழு புதுக்குடியிருப்பு மல்லிகைத் தீவை நோக்கிச் செல்கிறது. அங்கு யுத்தத்தால் பாதிப்படைந்து மீண்டும் நம்பிக்கையோடு வாழ்க்கையை கட்டி எழுப்ப படாத பாடுபடும் ஒரு இளம் முன்னாள் போராளி குடும்பத்தை சந்திக்கிறது,
பகுதி - 172
இவர்களுக்கு உதவிட விரும்பினால், 021 2030600, 076 7776363 ஆகிய இலக்கங்களுக்கு அழையுங்கள்.
