அநுர அரசின் ஆர்ப்பாட்டம் முடிவிற்கு வந்தது : தேர்தல் முடிவு குறித்து எதிரணி எம்.பி மதிப்பீடு
நடைபெற்று முடிந்த 2025 உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவு, தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கம் தன்னை பெருமளவில் மிகைப்படுத்திக் கொண்டது என்பதை நிரூபித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்(SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா(harsha de silva) தெரிவித்துள்ளார்.
முகநூலில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், “2025 தேர்தல் முடிவுகள் ஆளும் அரசாங்கத்தின் வாக்காளர் ஆதரவில் குறிப்பிடத்தக்க சரிவை சுட்டிக்காட்டுவதாகக் கூறினார்.
குறுகிய காலத்தில் அரசின் பிரபலம் வீழ்ச்சி
வாக்கு விகிதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, குறுகிய காலத்தில் அரசாங்கத்தின் பிரபலம் பலவீனமடைவதைக் குறிக்கிறது என்று குறிப்பிட்ட டி சில்வா, அதன் மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீட்டின் முடிவு என்று விவரித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி தனது வாக்கு விகிதத்தை மேம்படுத்தியுள்ள போதிலும், அது இன்னும் போதுமானதாக இல்லை என்றும் எம்.பி. குறிப்பிட்டார்.
நாட்டிற்கு முக்கியமான தருணங்கள்
இருப்பினும், இந்த உத்வேகம் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தற்போதைய பொது ஆணையை மதிப்பதாக அவர் தெரிவித்ததுடன் தற்போது நாட்டிற்கு முக்கியமான தருணங்கள் என்றும் அரசாங்கத்திற்கு நிபந்தனை அடிப்படையில் ஆதரவை வழங்கத் தயார் எனவும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
