எரிசக்தி அமைச்சரின் சாரதி இன்றிரவு படுகொலை -தீவிர விசாரணை ஆரம்பம்
murder
minister
driver
gamini loguke
By Sumithiran
எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று இரவு 8.00 மணியளவில் பிலியந்தலை மாவிட்டரையிலுள்ள சாரதியின் வீட்டிற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கத்திகுத்து தாக்குதலில் பலத்த காயமடைந்த அமைச்சரின் சாரதி பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்த காவல்துறையினர் இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி