ஈழத்தின் மண்வாசனையை கண்முன்னே கொண்டுவருகிறது “எங்கட ஊர்” காணொளிப்பாடல்
SriLanka
Engada Oor
Kokulan Santhan
AK Kamal
Tamil Album Song
By Chanakyan
எங்கள் ஊரில் நாம் வாழ்ந்த வாழ்க்கையின் பசுமையான நினைவுகளை அழகாக கண்முன்னே கொண்டு வந்திருக்கிறது “எங்கட ஊர்” என்ற காணொளிப்பாடல்.
பாடல்வரிகளை கவிப்புலவர் வேலணையூர் சுரேஸ் எழுதியிருக்க, இசைப்பிரியன் மிக தத்ருபமான முறையில் இசை அமைத்துள்ளார். இப்பாடலினை இளம்பாடகர் கோகுலன் சாந்தன் தனது குரலினால் வசீகரம் செய்துள்ளார். அவரே இயக்கியுள்ளார்.
ஏ.கே.கமல் தனது ஒளிப்பதிவில் பசுமைகளை கண்முன்னே கொண்டுவந்து செல்கிறார்.
பாடலின் படத்தொகுப்பு ஏ.எஸ்.பிரசாத், நடன அமைப்பு கிறிஸ்ரியன் மதி, தயாரிப்பு மற்றும் முகாமை உதவி இயக்கம் சுவீகரன், ஏ.எஸ்.கே.கலை, இயக்கம் ஏ.எஸ்.பிரதீப் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களின் அற்புதமான நடிப்பும், இசைப்பிரியனின் சிறப்பான இசையும், தத்ரூபமான இயற்கை அழகும் இணைந்து பாடலுக்கு வலுச் சேர்ந்திருக்கின்றன.