பியர் கான்களை விற்று கோடீஸ்வரரான தாத்தா
இங்கிலாந்தை(england) சேர்ந்த 60 வயது நபர் தான் சேர்த்து வைத்த பியர் கான்களை பல லட்சம் ரூபாய்க்கு விற்று கோடீஸ்வரரான சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நிக் வெஸ்ட் என்ற தாத்தாவே இவ்வாறு கோடீஸ்வரர் ஆனவராவார்.
42 ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான
நிக் தனது 20வது வயதிலிருந்தே பியர் கான்களை சேகரிப்பதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார். பல்வேறு நிறுவனங்களின் பியர் கான்களை சேர்த்து வைத்திருந்த அவர் கடந்த 42 ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பியர் கான்களை சேகரித்து வைத்திருந்துள்ளார்.
இதில் பல பியர் கம்பெனிகள் இப்போது செயல்பாட்டிலேயே இல்லை என தெரியவந்துள்ளது.
பழங்கால பியர் கான்களை போட்டி போட்டு வாங்கி
ஆனால் பெருமளவு பியர் கான்களை சேர்த்து வைத்திருந்த நிக் தாத்தாவிற்கு அதற்கு மேல் பியர் கான்களை சேகரிக்க வீட்டில் இடமே இல்லாததால் அவற்றை வரும் விலைக்கு விற்றுவிடலாம் என முடிவு செய்துள்ளார்.
நிக் பியர் கான்கள் விற்பனைக்கு என அறிவிக்கவும், பலரும் ஆர்வமுடன் பழங்கால பியர் கான்களை போட்டி போட்டு வாங்கியுள்ளனர். நிக் தனக்கு பிடித்தமான 3 பியர் கான்களை தவிர மற்ற அனைத்தையும் விற்று ரூ.26 லட்சம் லாபம் அடைந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |