இலங்கையர்களை கூலிப்படையாக விற்கும் நிறுவனம் : எம்.பி பரபரப்பு தகவல்
அவன்கார்ட் என்ற நிறுவனத்தினால் ரஷ்ய உக்ரைன் போருக்கு இலங்கையர்கள் கூலிப்படையாக விற்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர(Dayasiri Jayasekara) குறிப்பிடுகின்றார்.
ஆனால் அது இந்த நாட்டில் உள்ள நிறுவனமா அல்லது நாட்டில் உள்ள தனி நிறுவனமா என்பது தமக்கு தெரியாது எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிறுவனத்தை டிலான் மற்றும் சுரேஷ் என்ற இருவர் நடத்துவதாகவும் தெரிவித்தார்.
அவன்கார்ட் என்ற நிறுவனத்தினால்
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அவன்கார்ட் என்ற நிறுவனத்தினால் இந்நாட்டின் போர்வீரர்கள் ரஷ்யாவிற்கு கூலிப்படையாக விற்கப்படுகின்றனர்.
அந்த நாட்டில் பெருமளவிலான இலங்கையர்கள் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் சிலர் காயமடைந்து சிகிச்சை பெற முடியாத நிலையில் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
உதயங்க வீரதுங்கவிற்கு தொடர்பு
இதனிடையே ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க(Udayanga Weeratunga), ரஷ்ய போருக்காக இலங்கையர்களை கூலிப்படையாக விற்கும் கொள்ளையின் மூளையாக செயல்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட(Gamini Valeboda) தெரிவித்துள்ளார்.
மிகக் குறுகிய காலத்தில் ரஷ்யப் போருக்கு அனுப்பப்பட்ட இலங்கையர்களை விடுவிக்க முடியும் என உதயங்க வீரதுங்க தெரிவித்தமையால் இந்த சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |