பிரித்தானியா கட்சி மாநாடு ஒன்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (படங்கள்)
Gajendrakumar Ponnambalam
Sri Lanka
Sri Lankan Peoples
England
World
By Dilakshan
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த மாநாடானது நேற்று (02.10.2023) இடம்பெற்றுள்ளது.
இதன் போது அவர் முக்கிய தலைவர்களுடன் பேச்சு வார்த்ததைகள் நடத்தியுள்ளதுடன், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் (APPG-T) கன்சர்வேடிவ் உறுப்பினர்களையும் சந்தித்துள்ளார்.
கௌரவ விருந்தினர்
மேலும், தமிழர்களுக்கான கன்சர்வேடிவ் வரவேற்பு நிகழ்வில் கௌரவ விருந்தினராகப் பங்கேற்று, அங்கிருந்த கன்சர்வேடிவ் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆலோசகர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் முன்னிலையில் கஜேந்திரகுமார் உரையொன்றையும் நிகழ்த்தியுள்ளார்.




1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்