அமெரிக்காவின் உத்தியோகபூர்வ மொழியை அறிவித்த ட்ரம்ப்
Donald Trump
United States of America
World
By Harrish
அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஆங்கிலத்தை உத்தியோகபூர்வ மொழியாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) அறிவித்துள்ளார்.
ஆங்கில மொழியை முதல் மொழியாகப் பேசுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் பேசப்படும் ஆங்கிலமொழி அமெரிக்க ஆங்கிலம் என்று கூறப்படுகிறது.
உத்தியோகபூர்வ மொழி
இந்நிலையில், 350ற்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுவோர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான ஆங்கிலம் பேசப்பட்ட நிலையில், காலபோக்கில் ஆங்கில ஒலிப்பு முறை மற்றும் எழுத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வ மொழியாக ஆங்கிலத்தை அறிவித்து நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி