புலமைப்பரிசில் தொகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
முதல் தடவையில் சித்தியடைந்து இந்த ஆண்டு (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவை 1000 ரூபாவினால் அதிகரிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அதிபர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அதிபர் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மாணவ, மாணவிகளின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய நிலையிலேயே அதிபர் ரணில் விகரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
அதிபரின் பணிப்புரை
இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும், கற்கும் திறன் கொண்ட, ஆனால் பொருளாதாரச் சிரமங்களை எதிர்நோக்கி வரும் மாணவர்களை இனங்கண்டு அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க தீர்மானித்துள்ளார்.
அதன்படி, அதிபரின் பணிப்புரையின் பிரகாரம், அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலின் கீழ் அதிபர் நிதியம் இந்த புலமைப்பரிசில் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.
2021/2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ், அதிபர் நிதியத்தினால் புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன் இதுவரை 10 மாதாந்த தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், புலமைப்பரிசில் தொகை அதிகரிப்புடன், 2024 பெப்ரவரி முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் அதிபர் நிதியிலிருந்து 6,000 ரூபா மாதாந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
உயர் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
மேலும் 2022/2023 ஆண்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் தேர்ச்சி பெற்ற 5,000 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அந்த மாணவர் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வரை மாதாந்தம் ரூ. 6000 தொகையை வழங்குவதற்காக அதிபர் நிதியம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதன்படி, இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் தற்போது பிராந்திய மட்டத்தில் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தெரிவுகள் நிறைவடைந்தவுடன் உரிய மாணவ மாணவிகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான புதுப்பிக்கப்படும் தகவல்களை எதிர்காலத்தில் அறிந்து கொள்வதற்கு , நிதியத்தின் www.facebook.com/president.fund என்ற உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை மற்றும் உத்தியோகபூர்வ YouTube சேனலான www.youtube.com/@PresidentsFund ஐ like/follow அல்லது subscribe செய்யுமாறும் www.presidentsfund.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அதிபர் நிதியம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 13 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்