தமிழக கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்க - ஸ்டாலின் கடிதம்
தமிழக கடற்றொழிலாளர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையை சேர்ந்தவர்களால் தமிழக கடற்றொழிலார்கள் தொடர்ந்தும் தாக்கப்படுகின்றனர் என்றும் இதனை உடனடியாகத் தடுத்துநிறுத்த வேண்டும் என்றும் ஜெய்சங்கரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் மீதான இலங்கை நாட்டினரின் தாக்குதல் சமீபகாலமாக அதிகரித்து வருவதாகவும் (2023.21.08) ஆம் திகதி மட்டும் ஒன்பது சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஸ்டாலின் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம்

இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் தமிழக கடற்றொழிலாளர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிப்பதாகவும் ஸ்டாலின் கரிசனை வெளியிட்டுள்ளார்.
எனவே உரிய தூதரக வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கை அரசுடன் தொடர்புகொண்டு தமிழக கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்திட வேண்டுமென்றும் ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.