நிமலராஜன் கொலையில் மீண்டும் பேசுபொருளான ஈ.பி.டி.பி விவகாரங்கள்

Eelam People's Democratic Party Douglas Devananda Journalists In Sri Lanka
By Rusath Jan 01, 2026 12:11 PM GMT
Report

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை தொடர்பான விடயம் உள்ளிட்ட இன்னும் பல படுகொலைகளுக்கு ஈ.பி.டி.பி யினர் காரணமாக இருப்பது தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

புத்தாண்டு தினத்தில் நெதர்லாந்து தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து!

புத்தாண்டு தினத்தில் நெதர்லாந்து தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து!

ஆயுத குழுக்களின் தாக்கங்கள்

“கடந்த காலத்தில் வடக்கு - கிழக்கில் பல்வேறுபட்ட ஆயுத குழுக்களின் தாக்கங்களினால் பல்வேறுபட்ட அப்பாவி மக்கள் கடத்தப்பட்டும், காணாமலாக்கப்பட்டும்இ கொல்லப்பட்டும் இருக்கின்றார்கள்.

மேலும், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள். எமக்கு தனிப்பட்ட ரீதியில் எவர் மீதும் ஆத்திரமில்லை, ஆக்ரோஷம் இல்லை. ஆனால் வடக்கில் கடத்தல்கள் பல காணாமல்போன சம்பவங்களுக்கு பொறுப்பாக ஈ.பி.டி.பி கட்சி இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன.

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை தொடர்பான விடயத்திலும்சரி, பல்வேறு கடத்தல்களோடு சம்பந்தப்பட்ட கொலை செய்யப்பட்ட விடயங்களிலும்சரி, பத்திரிகை ஆசிரியர் அற்புதனின் படுகொலையாக இருக்கலாம், கே எஸ் ராஜாவின் படுகொலை, இன்னும் பல படுகொலைகளுக்கு காரணமாக ஈ.பி.டி.பியினர் இருந்ததாக மக்கள் பலர் குற்றச்சாட்டுகின்றார்கள்.

அதாவது ராஜபக்சவின் ஆட்சிக்காலம் சந்திரிகாவின் ஆட்சிக் காலங்களில் ஈ.பி.டி.பியினர் இவ்வாறு செயற்பட்டதாக குற்றச்சாட்டுகின்றார்கள்.

புதிய வருடத்துக்கான கடமைகளை ஆரம்பித்தல் : அரச ஊழியர்கள் சத்திய பிரமாணம்

புதிய வருடத்துக்கான கடமைகளை ஆரம்பித்தல் : அரச ஊழியர்கள் சத்திய பிரமாணம்

சட்ட ரீதியாக விசாரணை

எனவே அவை இதுவரையில் வெளிக்கொண்டுவரப்படவில்லை. கைது செய்யப்படுகின்றவர்கள் அப்பாவிகளாக இருந்ததால் தப்பிக் கொண்டனர்.

ஆனால் அந்தப் பாதிக்கப்பட்ட மக்களின் உறவினர்கள் சார்பாக சொல்லிக் கொள்வது யாதெனில் உண்மையான குற்றவாளிகள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே.

ஆகவே கிழக்கில் இருந்து யார் கைது செய்யப்பட்டாலும், வடக்கிலிருந்து யார் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் கடந்த காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் சட்ட ரீதியாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகின்றோம்.

இதனை நாம் பழிவாங்கல் என்று சொல்வதை விட குற்றத்திற்குரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதாகும்." என்றார்.

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : இன்று முதல் நடைமுறைக்கு வரும் சேவை

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : இன்று முதல் நடைமுறைக்கு வரும் சேவை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019