நாட்டு மக்களுக்கு ரணில் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி அறிவித்தல்..!

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan Peoples
By Kiruththikan Jun 27, 2023 04:43 PM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், கடந்த காலங்களில் செலுத்தப்பட்ட உயர் ஓய்வூதிய நிதிய விகிதத்தையும் எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பானது நாட்டின் வங்கிக் கட்டமைப்பு அல்லது எந்தவொரு அரச அல்லது தனியார் வங்கியின் ஸ்திரத்தன்மையையும் பாதிக்காது.

நாட்டில் உள்ள 50 மில்லியனுக்கும் அதிகமான வங்கி வைப்பாளர்களின் வைப்புத்தொகைக்கு எதுவித பாதிப்பும் எழாது என்றும், தற்போது வங்கி வைப்புத்தொகைக்கு செலுத்தப்படும் வட்டியையும் அது பாதிக்காது என்றும் அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பு

நாட்டு மக்களுக்கு ரணில் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி அறிவித்தல்..! | Epf Interest Rate Sri Lanka

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் நாளை (28) விசேட அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

இன்று (27) பிற்பகல் கம்பஹா மாவட்டச் செயலாளரின் நிர்வாக கட்டிடத் தொகுதியான ‘லக்சியனே மாளிகையை’ மக்களிடம் கையளிக்கும் நிகழ்வின் போதே அதிபர் இதனைக் குறிப்பிட்டார்.

கம்பஹா மாவட்ட மக்களுக்கு வினைத்திறன் மற்றும் முறையான அரச சேவையை வழங்கும் நோக்கில், ஏழு மாடிகளைக் கொண்ட நிர்வாகத் தொகுதிக்காக சுமார் நான்காயிரம் மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் இறுதியில், இலங்கையின் மொத்த அரச கடன் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு) 83,700 மில்லியன் டொலர்களாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 128.3% விகிதம் எனவும் அதிபர் சுட்டிக்காட்டினார்.

2022 ஆம் ஆண்டின் இறுதியில், மொத்த வெளிநாட்டுக் கடன் தொகை 41,500 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 63.6% ஆகும்.

அப்போது மொத்த உள்நாட்டுக் கடன் தொகை 42,100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 64.6% ஆகும் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

நாட்டின் கடனை மறுசீரமைக்காமல் பேணினால், 2035ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100%இற்கும் அதிகமான அரச கடன் இருக்கும் என சுட்டிக்காட்டிய அதிபர், வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் நாட்டின் கடனை மறுசீரமைக்க ஏற்கனவே உடன்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் கடன் நிலைத்தன்மையை உருவாக்குவதற்கு, கடன் மறுசீரமைப்பு அவசியமானது மற்றும் உள்நாட்டு கடனும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் அதிபர் கூறினார்.

எதிர்வரும் 5 வருடங்களில் மாத்திரம் 17 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடன் வழங்குநர்களிடமிருந்து பெறப்படும் எனவும், அதற்கிணங்க எமது உள்நாட்டு கடன்வழங்குநர்களும் இதற்கு பங்களிக்க வேண்டும் எனவும் அதிபர் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களின் வங்கி வைப்புகளை பாதுகாக்கும் முதன்மை நோக்கத்துடன் இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் அனைத்து வங்கிகளின் வங்கி வைப்பாளர்களையும் பாதுகாப்பது பாரிய பொறுப்பு எனவும் அதிபர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு முறையின்படி வங்கி வைப்பாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், வங்கி முறைமை வீழ்ச்சியடையாது எனவும், இது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பக்கூடிய மறுசீரமைப்பிற்கு வழி வகுக்கும் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார மீட்சி, வட்டி விகிதக் குறைப்பு, அரசாங்கம் இலகுவாக மானியங்கள் வழங்க முடிந்தமை, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள கடன் சுமை அடுத்த 10 வருடங்களில் குறைந்து அதன் மூலம் கிடைக்கும் பலன்களை நாட்டு மக்களுக்கு வழங்க முடியும் எனவும் அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

பிரான்சுக்கான கடைசி உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, பொதுநலவாய பொதுச் செயலாளர் பெட்ரிசியா ஸ்கொட்லாந்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, நெதர்லாந்து பிரதிப் பிரதமர் (முதல்) மற்றும் நிதி அமைச்சர் சிக்ரிட் காக், அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஜெனட் யெலன் மற்றும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி ஆகியோருடன் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு மற்றும் இலங்கையின் நிதித்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கலந்துரையாடியதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை மாற்றியமைக்க முடிந்ததையிட்டு அனைவரும் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்ட அதிபர், எதிர்காலத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கூடுதல் பங்களிப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான தொலைபேசி உரையாடலின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சாதகமான பங்களிப்பை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்ததுடன், இந்த விடயம் தொடர்பில் இந்தியாவுடன் நீண்ட கலந்துரையாடல் மேற்கொள்ள உள்ளதாக அதிபர் தெரிவித்தார்.

தற்போது சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கிவின் கான்ட் உடன் நடத்திய கலந்துரையாடலின் போது, இருதரப்பு மற்றும் பொருளாதார தொடர்புகளை பலப்படுத்துவதுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக அதிபர் குறிப்பிட்டார்.

சீன நிதியமைச்சர் லீ கியூன் உடனான கலந்துரையாடலின் போது,நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான முன்னேற்றத்திற்கான திட்டம் குறித்து ஆராயப்பட்டதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

நெருக்கடி நிலையில் சீனா வழங்கிய ஒத்துழைப்பிற்கு அமைச்சர் அலி சப்ரி நன்றி தெரிவித்தாகவும் அதிபர் குறிப்பிட்டார். இந்த விஜயத்தின் போது, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவினால் நியமிக்கப்பட்டுள்ள சைனா எக்சிம் வங்கியின் தலைவர் வூ புலின்மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

கடன் மறுசீரமைப்பிற்கு உச்ச பங்களிப்பு அளிப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர் என்றும் அதிபர் குறிப்பிட்டார். பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, நளின் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர, சிசிர ஜெயகொடி, லசந்த அழகியவன்ன, ஜானக வக்கம்புர, கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப், நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் லான்ச, சுதர்ஷனி பெர்ணாடோபுள்ளே, மிலான் ஜெயதிலக, காலநிலை மாற்றம் தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 2ம் வட்டாரம், கொழும்பு 6

09 Dec, 2023
மரண அறிவித்தல்

நெல்லியடி, New Malden, United Kingdom

19 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Neuilly-sur-Marne, France

23 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திரியாய், முருகாபுரி, Pickering, Canada

24 Nov, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

21 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ் நவாலி தெற்கு, Jaffna, பரிஸ், France, மெல்போன், Australia

21 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி, புலோலி தெற்கு, கொழும்பு

28 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, London, United Kingdom

25 Nov, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், கற்சிலைமடு, Dartford, United Kingdom

01 Dec, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Liverpool, United Kingdom

27 Nov, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சரவணை கிழக்கு

24 Nov, 2024
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, Toronto, Canada

24 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

23 Nov, 2019
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று வடக்கு

23 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, London, United Kingdom

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
மரண அறிவித்தல்

மாதனை, கொழும்பு, Toronto, Canada

22 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

24 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, Aulnay-sous-Bois, France

06 Dec, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் தங்கோடை, அளவெட்டி, London, United Kingdom

04 Dec, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுவில், பிரான்ஸ், France, Ajax, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, மட்டுவில் தெற்கு, Bobigny, France

15 Nov, 2024
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை

12 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014