ஓய்வூதியதார்களுக்கு வெளியான அறிவிப்பு: முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு!
ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தை திருத்தம் செய்ய தொழிலாளர் அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களின் வசதிக்காகவும் மற்றும் அதிக பலன்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும் இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் தொழிலாளர் அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில், முக்கிய சில விடயங்களைத் திருத்த முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறிமுறை
இதனடிப்படையில்,
- அபராதம் மற்றும் அபராதம் அறவிடும் பொறிமுறையை மேலும் வினைத்திறன்மிக்க நிலைக்குக் கொண்டு வருதல்.
- வர்த்தக வங்கிகளுக்குப் பதிலாக, ஊழியர் சேமலாப நிதியம் ஊடாக அதன் உறுப்பினர்களுக்குக் கடனுதவி வசதிகளை வழங்குதல்.
- ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பில் தற்போதுள்ள சமத்துவமின்மையை நீக்குதல்.

போன்ற விடங்களில் மாற்றம் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க மற்றும் இலங்கை முதலாளிமார் சம்மேளனம், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
சம்பள அதிகரிப்பு
இது தொடர்பில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், முதலாளிகளிடமிருந்து அபராதம் அறவிடும் பொறிமுறையானது சிக்கலற்றதாக இருக்க வேண்டும் என்றும் மற்றும் இதன் மூலம் உரிய அபராதங்களை துரிதமாக அறவிட வாய்ப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அப்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக ஆக்கபூர்வமான நம்பிக்கையை வைத்திருக்க முடியும் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |