மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான விசாரணை இன்று!
முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் உயர் நீதிமன்றில் முன்னிலையாக உள்ளனர்.
குறித்த விசாரணையானது இன்று (15) இடம்பெற உள்ளது.
ஈஸ்டர் குண்டு தாக்குதல் நட்டஈடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளில் அவர்கள் இவ்வாறு முன்னிலையாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி 7 பேர் அடங்கிய நீதியரசர்களினால் சம்பவத்தில் காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது.
சட்ட நடவடிக்கை
எனினும் சிலர் இந்த நட்டஈட்டுத் தொகையை உரிய முறையில் செலுத்தவில்லை என நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மனுவின் பிரகாரம் இன்றைய தினம் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலையாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது .
