வடக்கு கிழக்கில் மதரீதியான பிரச்சினைகளை கண்டறிய புதிய குழு
இலங்கையில் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான நகர்வுகள் தென்னிலங்கையில் இடம்பெற்று வரும் நிலையில், சிறிலங்காவின் முக்கிய பௌத்த பீடாதிபதிகளுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்க பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
இந்தப் பேச்சுக்களின் போது இலங்கையில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே தான் அனைத்து நகர்வுகளையும் மேற்கொண்டு வருவதாக உறுதியளித்த ரணில் விக்ரமசிங்க, 13 ஆம் திருத்தம் குறித்தும் கலந்துரையாடியுள்ளதுன், வடக்கு கிழக்கில் மதரீதியான பிரச்சினைகளை கண்டறிவதற்கு மாகாண மட்டத்தில் மதத் தலைவர்கள் தலைமையிலான ஒரு குழு அமைக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
நேற்றையதினம்(30) அதிபர் ரணில் விக்ரமசிங்க, மல்வத்து, அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களிடம் ஆசி பெற்றதுடன், சமகால நிலைமைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்துள்ளார்.
குருந்தூர் விவகாரம்

அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரர்களான, ஆணமடுவே தம்மதிஸ்ஸி தேரர் மற்றும் வெடருவே உபாலி தேரர் ஆகியோரையும் சந்தித்து அதிபர் கலந்துரையாடியதுடன், குருந்தூர் விகாரைக்குள் அண்மையில் குழுவொன்று அங்கு நுழைந்து குழப்ப நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது எனவும் அதுபற்றிய விடயங்களைக் கண்டறிய வேண்டும் எனவும் ஆணமடுவே தம்மதிஸ்ஸி தேரர் அதிபரை கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதில் அளித்த அதிபர் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்களைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என உறுதி அளித்துள்ளார்.








செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 17 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்