பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு நிச்சயம் : அமைச்சர் அதிரடி அறிவிப்பு
அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதன் படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன (Samantha Viddyarathna) தெரிவித்துள்ளார்.
பண்டாரவளையில் இன்று (12) இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், "லயத்தில் வாழ்பவர்களும் மனிதர்களே. அதனால் அவர்களுக்கான காணியை வழங்குவது மாத்திரமல்ல.
வீட்டு உரிமை பத்திரங்கள்
நாம் வழங்கிய வாக்குறுதியின் படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாய் வரை உயர்த்துவதற்கு உறுதி அளிக்கின்றோம்” என தெரிவித்தார்.
இதேவேளை மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் இடம்பெறுகிறது.
இந்திய நிதி உதவியுடன் செயற்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டமாக 2,000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைகள் இதன்போது வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
