அதிவேக நெடுஞ்சாலையில் எத்தனோல் கடத்திய நபர் கைது!
Police
Expressway
Ethanol
Angunakolapelessa
Arest
By Chanakyan
போலி ஆவணங்களை பயன்படுத்திய எத்தனோல் கடத்திய குற்றச்சாட்டுக்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அங்குணகொளபெலஸ்ஸ நுழைவாயிலுக்குள் நுழைந்த லொறி மீது அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையின்போதே இந்த கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 25 பீப்பாய்களில் அடைக்கப்பட்ட 5 ஆயிரம் லீட்டர் எத்தனோல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், லொறியின் சாரதியான களனி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தற்சமயம் சந்தேக நபர் வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், வலஸ்முல்ல நீதிவான் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்