ஐரோப்பிய ஒன்றியத்தின் நிவாரண பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கியது விமானம்
European Union
Bandaranaike International Airport
Sri Lankan Peoples
Flight
Floods In Sri Lanka
By Sumithiran
ஐரோப்பிய ஒன்றியத்தின் சுமார் €500,000 மதிப்புள்ள மனிதாபிமான உதவிப் பொருள் இன்று (17) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
ஜெர்மனி மற்றும் லக்சம்பேர்க்கில் இருந்து போயிங் 747-400 சரக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட 69,000 கிலோ எடையுள்ள இந்த உதவிப்பொருட்களில் கூடாரங்கள், அவசரகால தங்குமிடங்கள், சமையல் பாத்திரங்கள், மெத்தைகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் அடங்கும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவி
விமானம் லீப்ஜிக்கில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு தரையிறங்கியது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் நிவாரண முயற்சிகளை ஆதரிக்கும் நோக்கில் பொருட்களைப் பெற ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மன் தூதரகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
3 நாட்கள் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
4 நாட்கள் முன்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்