யாழ். வரும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் செம்மணி மனிதப் புதைகுழிக்கு விஜயம்
ஐரோப்பிய ஒன்றியப் (European Union) பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் குறித்த குழுவினர் செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் குறித்த குழுவில் நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ருமேனியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
செம்மணி மனிதப் புதைகுழி
அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதி நிதிகள் குழு ஒன்று எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த குழுவினர் யாழில் பல தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேவேளை செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |