ஆயுத இறக்குமதியில் முதலிடத்தை பிடித்த நாடு : ஆச்சரியத்தில் உலக நாடுகள்
உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக உக்ரைன் மாறியுள்ளதுடன், 2020 தொடக்கம் 24 ஆம் ஆண்டு வரை ஐரோப்பிய ஆயுத இறக்குமதி 155 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளியான தரவுகளின் அடிப்படையில், உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்க (America) நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது.
2015 தொடக்கம் 2019 காலகட்டத்தில் 35 சதவிகிதமாக இருந்த தங்கள் பங்கை 2020-24 ஆம் ஆண்டில் 43 சதவிகிதம் என உயர்த்தியுள்ளது.
ஆயுத இறக்குமதி
2020 தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரை உலகளாவிய ஆயுத இறக்குமதியில் ஐரோப்பா (Europe) ஒட்டுமொத்தமாக 28 சதவிகித பங்கைக் கொண்டிருந்த நிலையில், இது 2015 மற்றும் 2019 இற்கு இடையில் 11 சதவிகிதமாக இருந்தது.
2020 தொடக்கம் 24 ஆம் ஆண்டில் உலகளாவிய ஆயுத இறக்குமதியில் உக்ரைன் மட்டும் 8.8 சதவிகிதம் முன்னெடுத்துள்ள நிலையில் அந்த இறக்குமதிகளில் பாதிக்கும் குறைவானவை அமெரிக்காவிலிருந்து வந்தவை.
தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) நிர்வாகம் உக்ரைனுக்கான ஆயுத உதவிகள் அனைத்தையும் நிறுத்தியுள்ளது.
தவறான நடவடிக்கைகள்
1962 கியூப ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் (Russia) இடையே மிகப்பெரிய மோதலுக்கு உக்ரைன் (Ukraine) மீதான ரஷ்யாவின் படையெடுப்பு வழிவகுத்தது.
இருப்பினும், உக்ரைன் மீதான படையெடுப்பை முன்னெடுத்த ரஷ்யா தெரிவிக்கையில் தவறான நடவடிக்கைகள் மூன்றாம் உலகப் போரைத் தூண்டக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
இதே கருத்தையே, தற்போது ரஷ்ய ஆதரவு நிலையை எடுத்துள்ள அமெரிக்காவும் தெரிவித்துள்ளது.
2020 தொடக்கம் 2024 வரை ஐரோப்பாவின் ஆயுத இறக்குமதியில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமானவற்றை அமெரிக்கா வழங்கியது.
உள்நாட்டு தேவை
பிரித்தானியா (United Kingdom), நெதர்லாந்து (Netherlands) மற்றும் நோர்வே (Norway) ஆகிய ஆண்டுகள் இதில் முன்னணியில் உள்ளது.
சமீபத்தில் அமெரிக்கா கொள்கைகளில் ட்ரம்ப் நிர்வாகம் மாற்றம் கொண்டுவந்ததை அடுத்து பாதுகாப்புக்கு என அதிகம் செலவிட வேண்டும் என்ற முடிவுக்கு ஐரோப்பிய நாடுகள் வந்துள்ளன.
இதனிடையே, 2020 தொடக்கம் 2024 காலகட்டத்தில் ரஷ்ய ஆயுத ஏற்றுமதி உலக சந்தையில் 7.8 சதவிகிதம் என குறைந்துள்ளதுடன் இது முந்தைய நான்கு ஆண்டு காலத்தில் 21 சதவிகிதம் என இருந்தது.
உக்ரைன் போரினால் சர்வதேச தடைகள் மற்றும் ஆயுதங்களுக்கான உள்நாட்டு தேவை அதிகரித்ததன் விளைவாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 2 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
6 நாட்கள் முன்