இஸ்ரேலை கைவிடும் ஐரோப்பாவின் பெரிய நிதி நிறுவனங்கள்
ஐரோப்பாவின் (Europe) மிகப் பெரிய நிதி நிறுவனங்கள் பல இஸ்ரேலிய (Israel) நிறுவனங்கள் அல்லது அந்நாட்டுடன் தொடர்பு கொண்ட நிறுவனங்களுடன் தங்கள் தொடர்பைத் துண்டிக்கும் நிலையை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் மற்றும் பல நாடுகளின் அரசாங்கங்கள் அளிக்கும் அழுத்தம் அதிகரிக்கின்ற நிலையில் பல நிறுவனங்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் நிலை மற்றும் நிர்வாக நோக்கங்களைப் பற்றி அடிக்கடி வெளிப்படுத்தும் போது, அவர்கள் போருக்குத் தங்கள் சாத்தியமான ஆதரவு நிலையை வெளிப்படுத்துவது குறைவாகவே உள்ளது.
தடைசெய்யப்பட்ட பட்டியல்
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் UniCredit நிறுவனம் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இஸ்ரேலை அடையாளப்படுத்தியது.
தற்போது காஸா போர் தொடர்பில் இஸ்ரேலுக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்யும் எந்த நாட்டுக்கும் ஆயுத உற்பத்தி தொடர்பில் நிதியுதவி அளிப்பதில்லை என இத்தாலி வங்கிகள் தங்கள் கொள்கை முடிவை சுட்டிக்காட்டியுள்ளன.
காப்பீட்டு நிறுவனம்
இதனிடையே, நார்வே நாட்டின் Storebrand நிறுவனமும் பிரான்ஸ் (France) காப்பீட்டு நிறுவனம் AXA ஆகியவை வங்கிகள் உட்பட சில இஸ்ரேலிய நிறுவனங்களின் பங்குகளை விற்றுள்ளன.
ஆயுதங்களின் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் முதலீடு செய்வது நிலையான வளர்ச்சியின் கொள்கைகளுக்கு அடிப்படையில் எதிரானது என குளோபல் அலையன்ஸ் ஃபார் பேங்கிங் ஆன் வேல்யூஸின் நிர்வாக இயக்குனர் மார்ட்டின் ரோஹ்னர் (Martin Rohner) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஹமாஸ் படைகளின் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் இராணுவம் கடந்த ஆண்டு காஸாவிற்குள் நுழைந்ததில் இருந்து இஸ்ரேலின் முதலீட்டாளர் வரிசை குறைந்துள்ளமை ஆய்வில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |