ஐரோப்பிய எல்லை இறுக்கம் - கைரேகை - நிழற்பட பதிவு இனி கட்டாயம்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிக்கும், ஒன்றிய நாட்டு குடிமக்கள் இல்லாத ஏனைய அனைவரும் எதிர்வரும் ஒக்டோபர் 12 முதல் புதிய நடைமுறைகளை எதிர்கொள்ளும் நிலை எழுந்துள்ளது.
இதனால் செங்கன் வலையநாடுகள் உட்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் சுவிஸ் மற்றும் நோர்வே உட்பட்ட நாடுகளுக்கு பயணிக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் தமது கைவிரல் ரேகைகள் மற்றும் நிழற்படங்கள் உட்பட்ட பயோமெற்றின் தரவுகளை வழங்கவேண்டும்.
கடந்த பத்து ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட இந்த நடைமுறை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதல் வரவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம்
EES அல்லது என்றி எக்சிற் சிஸ்ரம் (Entry/Exit System) எனப்படும் இந்த நடைமுறை மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைபவர்கள் மற்றும் வெளியேறுபவர்கள் தொடர்பான கண்காணிப்பு நிலை ஒன்று உருவாகும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இனிமேல் ஓன்றியத்தின் உறுப்பு நாடாக இல்லாத நாடுகளில் இருந்து நுழையும் வாகன சாரதிகள் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்பட்டு அனுமதிக்கபட்ட காலத்தைவிட அவர்கள் தங்கியிருந்தால் அபராதங்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் 12 முதல் பிரித்தானிய குடியுரிமை உள்ளவர்களும் பிரான்ஸ் உட்பட ஒன்றிய நாடுகளின் எல்லைகளுக்குள் பிரவேசிக்கும போது தமது கைவிரல் அடையாளங்கள் மற்றும நிழற்படங்களை வழங்கிக்கொள்ள வேண்டும்.
இதனால் லண்டனில் யூரோஸ்ரார் தொடருந்து நிலையத்திலும் டோவர் உட்பட்ட துறைமுகங்களில் ஒவ்வொரு பயணியும் எல்லையைக் கடக்க சில நிமிடங்கள் கூடுதல் காத்திருக்கவேண்டிவரும் என அறிவிக்கபட்டுள்ளது.
இந்த நடைமுறை சைப்ரஸ் மற்றும் அயர்லாந்து தவிர்ந்த ஏனைய அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் சுவிஸ் மற்றும் நோர்வே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா
