ஐரோப்பிய ஒன்றிய தூதுவருக்கும் அநுரகுமாரவிற்கும் இடையில் சந்திப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் காமென் மொரெனோவுக்கும் (Carmen Moreno) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று(13) மக்கள் விடுதலை முண்ணனி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் நடப்பு அரசியல் நிலைமை பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம்
இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், ஜனநாயகத்தை பாதுகாத்தலைப்போன்றே தேர்தல்களை பிற்போடுதல் பற்றியும் கவனத்தில் கொள்ளப்பட்டது.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் பற்றியும் இந்த உரையாடலின் போது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதோடு இருதரப்பினருக்கும் இடையில் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ளல் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை பிரதிநிதிகள் குழுமத்தின் பிரதிப் பிரதானி லார்ஸ் பிறெடால் அவர்களும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் விஜித ஹேரத்தும் பங்கேற்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |