உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியான அறிவித்தல்
Sri Lanka
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Sathangani
நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு செலுத்தப்பட்ட அதே கட்டணத் தொகையே இம்முறையும் வழங்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
346,976 பரீட்சார்த்திகள் தோற்றினர்
க.பொ.த உயர்தர பரீட்சை ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை 2300இற்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.
இம்முறை 346,976 பரீட்சார்த்திகள் க.பொ.த உயர்தர பரீட்சைக்காக தோற்றியமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ரத்து செய்யப்பட்ட விவசாய விஞ்ஞான பரீட்சை இன்று (01) நடைபெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்