எடின்பரோ மரதன் ஓட்ட நிகழ்வு: கௌரவப்படுத்தும் கிளிநொச்சி மக்கள்
தாயகத்தில் போதை ஒழிப்பு மற்றும் பசுமை பேணல் ஆகிய நோக்கங்களை அடைவதற்காக எடின்பரோ நகரில் நடைபெறும் மரதன் ஓட்ட நிகழ்வில் பங்கேற்று நிதியினை சேகரித்து தாயகத்தின் மனித வள மற்றும் மாண்புமிகு சூழலை ஏற்படுத்தும் வகையில் கிளிநொச்சி (Kilinochchi) டிப்போ சந்தியில் இருந்து புதுமுறிப்பு விக்கினேஸ்வரா வித்தியாலயம் வரையில் அடையாள மரதன் ஓட்டநிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த மரதன் ஓட்ட நிகழ்வு லண்டனை (london) தளமாக கொண்டு இயங்கும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (25) காலை நடைபெற்றுள்ளது.
எடின்பரோ (Edinburgh) நகரில் நடைபெறுகின்ற மரதன் ஓட்ட நிகழ்வை கௌரவப்படுத்தும் வகையில் இந்த மரதன் ஓட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சூழல் பாதுகாப்பு
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்ற போதும் தாய் மண்ணின் நினைவு அழியாப் பற்றுடன் கல்வி கலாச்சாரம் சூழல் பாதுகாப்பு நோய் தடுப்பு விவசாய அபிவிருத்தி மற்றும்அனர்த்த கால உதவிகள் என பெருந்தொண்டு ஆற்றி வருகின்றனர்.
இந்த நிகழ்வில் பெருமளவான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், புலம்பெயர் தேசத்தில் இருந்து வந்த உறவுகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |