அதிபரால் திறந்து வைக்கப்பட்ட பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம்
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
5,320 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த சுகாதார நிலையம் (Centre of Excellence for Women’s Healthcare) இன்று (255.2024) காலை அதிபரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க யாழில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் நேற்றைய தினம் கலந்துகொண்டிருந்தார்.
அதிபரின் கிளிநொச்சி விஜயம்
இந்நிலையில், இன்று (25) காலை கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட போதே பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் அதிபரினால் திறந்து வைக்கப்பட்டது.
நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன், அரசாங்கம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுகாதாரத்துறை அதிகாரிகள், வைத்தியசாலை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |