கிளிநொச்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் வாகனம் விபத்து...! கடும் வாகன நெரிசல்
கிளிநொச்சியில் (Kilinochchi) டிப்பர் வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று (25) காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி பொது வைத்தியசாலை (District General Hospital Kilinochch) முன்பாக இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதி ஓரத்தில் வைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புக்களுடன் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது.
கடுமையான சேதம்
இவ் விபத்தில் டிப்பர் வாகனத்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, கிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்தை திறந்து வைப்பதற்காக இன்றையதினம் (25) அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) விஜயம் செய்யவுள்ளார்.
இந்நிலையில், நிகழ்வு இடம்பெறும் பகுதியில் இடம்பெற்ற விபத்தினால் வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில், வாகன நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 5 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)