பருத்தித்துறையில் இடம்பெற்ற மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு
தமிழர் தாயக போராட்டத்தில் தன் உயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோரை கௌரவிக்கும் நிகழ்வு பருத்திதுறையில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு அங்கு இரண்டு மாவீரர்களின் பெற்றோர்கள் பொது ஈகை சுடர் ஏற்றி வைத்ததை தொடர்ந்து மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
மேலும், அக வணக்கப்பாடல் பாடப்பட்டு மாவீரர் பெற்றோர் உறவுகளால் தங்கள் பிள்ளைகளை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றினர்.
அதனைத் தொடர்ந்து மாவீரர் பண்டிதரின் தாயார் பொதுக் கல்லறைக்கு மலர் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தியத்தை தொடர்ந்து மாவீரர்கள் பெற்றோர், உரித்ததுடையோர், உறவுகள், அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் என மலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.







| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |