எவரெஸ்ட் சிகரத்தில் இளம் வயதில் ஏறி சாதனை படைத்த இந்திய மாணவி
India
Nepal
World
By Fathima
இந்தியாவை (India) சேர்ந்த மாணவி ஒருவர் சமீபத்தில் நேபாளத்தில்( Nepal) உள்ள எவரெஸ்ட் சிகரத்தில்( Mount Everest) ஏறி சாதனை படைத்து பெருமையை சேர்த்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த காம்யா கார்த்திகேயன் (வயது 16) என்ற மாணவியே இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய இளம் வயது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
சாதனை படைத்த மாணவிக்கு வாழ்த்து
இந்த நிலையில், சர்வதேச எவரெஸ்ட் தினத்தை முன்னிட்டு காத்மாண்டுவில் (Kathmandu) நேற்றையதினம் (29) சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய நேபாள பிரதமர் பிரசந்தா (Pushpa Kamal Dahal) , எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த காம்யா கார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்