“முழு நாட்டுக்குமே ஆபத்தாகி விடும்” கடும் எச்சரிக்கை
corona
sri lanka
people
By Shalini
கொரோனா வைரஸின் விகாரமான டெல்டா பரவாமல் இருக்க அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
இல்லை என்றால் அது முழு நாட்டுக்குமே ஆபத்தாகி விடும் என இலங்கை பொது சுகாதார சேவைகள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன கூறினார்.
டெல்டா மாறுபாட்டைப் பற்றி புரிதல் இல்லாமல் செயல்படுவதாகவும் இயல்பான நிலையில் மக்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆனால் இலங்கையின் பல பகுதிகளில் டெல்டா விகாரங்கள் பதிவாகியுள்ளன, அத்துடன் தினமும் 2,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவாகின்றனர்.
ஆகவே பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட போதும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி